வெகு நாட்களுக்கு முன்பு ஒரு கேள்வி கேட்டிருந்தேன், "Define friendship?". எப்போதும் போல அதிக பதில்கள் இல்லை. சிலர் நட்பை வரையறுக்க முடியாது என்றனர். வரையறுக்க முடியாது என்று ஏதேனும் உள்ளதா?. அனைத்தும் வரையறுக்க பட்டதுதான். நாம் நாளிடைவில் அவைகளை மறந்துவிடுகிறோம். தமிழனதிற்கு சொந்தமான வள்ளுவன்அதை செய்து விட்டான். இரண்டே குறளில் முடித்துவிட்டான். இதொ அவை கீழே...
"அழிவி னவைநீக்கி ஆற்ய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு."
கெட்ட வழியில் நண்பன் செல்வதை நீக்கி, நல் வழியில் செலுத்தி,
அவனுக்கு துன்பம் வந்தவிடத்து உடனிருந்து அனுபவிப்பதே நட்பு.
"மருவுக மாசுஅற்றார் கேண்மைஒன் றீத்தும்
ஒருவுக ஒப்பிலார் நட்பு."
குற்றமற்றவர் நட்பையே கொள்ளவேண்டும்;
ஒப்பில்லாதவன் நட்பை அவன் விரும்பியது கொடுத்தேனும் கைவிடுக.
No comments:
Post a Comment