Wednesday, 14 March 2012

தடையில்லா நிரந்தர இலவச மின்சாரம்!

     அணுமின்சாரம் வேண்டுமா? வேண்டாமா? என காரசாரமாக விவாதித்து வரும் இவ்வேளையில் இந்த தடையில்லா நிரந்தர இலவச மின்சாரத்தை பற்றிய பதிவு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.

     இன்று வருடத்தின் பெரும்பாலான நாட்கள் சூரிய ஒளியையே காண முடியாத ஐரோப்பிய நாடுகளில், சூரிய கதிர்களால் செயல்படும் மின்சார சக்தியை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார்கள். இங்கு இங்கிலாந்தில் இது பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. தமிழகமோ அனல் பறக்கும் சூரிய ஒளிக்கதிர்களை கொண்டிருந்தும் இந்த சூரிய ஒளிக்கதிர்களால் இயங்கும் மின்சாரத்தை அமல்படுத்தவில்லை. ஒரு சதுர மீட்டர் கொள்ளளவில் படுகின்ற சூரிய ஒளிக்கதிரால் ஒரு நாளைக்கு 1௦௦௦ வாட்ஸ் மின்சாரத்தை பெற முடியும். இதற்கு நாம் சோலார் பனல் எனப்படும் தகடுகளை நம் வீட்டின் கூரையிலோ அல்லது நன்கு சூரிய ஒளிக்கதிர்கள் படும் இடத்திலோ பொருத்தினால் போதும்.

     இதனால் சாதாரணமாக ஒரு வீட்டிற்கு தேவைப்படும் மின்சாரத்தை பெற முடியும். ஆனால் Air conditioner போன்ற அதிக மின்சாரம் தேவைப்படும் இடங்களுக்கு இவையால் முழு மின்சாரத்தையும் வழங்க முடியாது. இங்கிலாந்தில் நம் வீட்டில் நாம் உற்பத்தி செய்யும் மின்சாரத்திற்கு அரசே பணம் தருகிறது. அதாவது நாம் பயன்படுத்தும் மின்சாரத்திற்கும் சேர்த்து.

     இங்கிலாந்தில் இதன் வருமானத்தை கருத்தில் கொண்டு, பெரிய நிறுவனங்கள் வீட்டின் கூரைகளை ஒப்பந்தபடி பெற்று அதில் இந்த சோலார் பேனல்களை நிறுவி, அதிலிருந்து வரும் வருமானத்தை பெற்றுக் கொள்கிறார்கள். வீட்டின் உரிமையாளர் தேவையான மின்சாரத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.

     நாமும் இத்திட்டத்தை அமல் படுத்தினால் அரசின் மின்சாரத்தையே சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. காற்றாலை மூலம் தயாரிக்கப் படும் மின்சாரம் நன்கு காற்று வீசினால்தான் நிறைய உற்பத்தியாகும். ஆனால் சூரிய ஒளிக்கதிர்கள் என்றுமே அடிப்பதால் தினமும் இது மின்சாரத்தை உற்பத்தி செய்யும். இதன் ஒரே பிரச்சினை என்னவென்றால், இதன் ஆரம்ப கட்ட முதலீடு அதிகமாக இருக்கும். இதற்கு இந்தியாவில் எவ்வளவு பணம் ஆகும் என தெரியவில்லை. இங்கிலாந்தில் சுமார் பத்து லட்சம் ரூபாயாகிறது.

இனி இது செயல்படும் விதத்தை பார்ப்போம்:

     இந்த சோலார் தகடுகள் சூரிய ஒளியை DC கரண்ட்டாக மாற்றி விடும். பின்னர் இது நம் உபயோகத்திற்கு தேவையான AC கரண்ட்டாக மாற்றப்பட்டு நம் வீட்டில் ஏற்கனவே இருக்கிற Switch board இல் இணைக்கப்படும். இது உற்பத்தி செய்கின்றதைவிட அதிக மின்சாரம் தேவைப்பட்டால், அது அரசின் மின்சாரத்தை எடுத்துக்கொள்ளும். அதே சமயம் நம் தேவையைவிட அதிகமாக வரும் மின்சாரம், அரசின் மின் கம்பத்திற்கு மீட்டரின் வழியே சென்று விடும். இதனால் நாம் அரசிற்கு எவ்வளவு மின்சாரம் வழங்கியுள்ளோம் என தெரிந்து கொள்ளலாம். அதற்கான பணத்தை அரசு வழங்கிவிடும்.

       தமிழகத்தில் எதையெல்லாமோ இலவசமாக வழங்குகிறார்கள். இப்படி உருப்படியானவற்றை இலவசமாக வழங்கலாம்! அல்லது மானியங்கள் கொடுக்கலாம். மிச்சி, கிரைண்டர் என கொடுத்து விட்டு மின்சாரத்தை சரியாக வழங்கமாட்டார்கள்! தமிழக முதல்வர் ஜெயலலிதா, என்ன புரட்சியை செய்து புரட்சி தலைவி என்ற பட்டத்தை பெற்றாரோ தெரியவில்லை. இந்த மின் திட்டத்தை அமல் படுத்தி உண்மையிலேயே புரட்சி தலைவி ஆவாரா?

      பின்குறிப்பு: இந்த பதிவை யார் வேண்டுமானாலும் தங்கள் வலைத்தளத்தில் வெளியிடலாம். இது பலரையும் சென்றடையவேண்டும் என்பதே என் நோக்கம்.

-தஞ்சை தேவா

Sunday, 22 January 2012

வெகு நாள் கழித்து ஒரு சோகமான நாள்

    கடந்த வாரம் முழுவதும் சிறப்பான நாட்களாகவே இருந்தது. நுண்செயலி நிரல் பதிவிறக்கம், கணினி சார்ந்த அலைவுகாட்டி, என பல விடயங்கள் நல்ல வகையில் முடிவுற்றன. ஆனால் இந்த வாரத்தின் தொடக்கமே வெறுப்போடும், ஒன்றுமிலாத் தன்மையோடும் துவங்குகிறது. காத்திருந்து நடப்பவற்றை காண்போம். 

Friday, 11 November 2011

காந்தியும் காங்கிரசும் - ஒரு முகநூல் பதிவு



       "மதுரை காந்தி அருகாட்சியகதுக்கு அனுப்பினால் இந்த போட்டோவை வைக்க மாட்டேன்னு சொல்றாங்க ...என்ன செய்வது ... ஏன் காந்தி டான்ஸ் ஆட கூடாதா ? இல்லை வெள்ளைகாரியோட ஆடுறது அவர் வேலை பார்த்த கம்பெனியை (காங்கிரசு) காட்டி குடுக்குமா ? ? ஆனால் ஒன்று மட்டும் புரிகிறது ...தோழர் தலித் சுப்பையா பாடிய "வெள்ளைக்காரன் பெத்து போட்ட கள்ள புள்ள காங்கிரசு " என்ற பாடல் இந்த படத்தை பார்த்தல் நி னைவுக்கு வருகிறது."


        இது முகநூலில், ஒரு தோழர் எழுதிய பதிவு. 

Monday, 7 November 2011

ஏழாம் அறிவு

      ஏழாம் அறிவு ஒரு படம் மட்டும் இல்லை. இது ஒரு வரலாற்று பதிவு. தமிழர்களின் சிறப்பை எடுத்துகூறும் நிகழ்படம். தமிழன் என்ற திமிரு வரும் என்று கூறியபோது, மிகைபடுத்தி பேசுகின்றனர் என்றுதான் நினைத்தேன், ஆனால் படம் பார்த்தபின்பு அது உண்மைதான் என்பதை உணர்ந்தேன். அதற்க்காக முன்பு எனக்கு தமிழ் உணர்வு இல்லை  என்று பொருள் இல்லை.

       சிலர் இந்தபடம், தமிழர்களின் உணர்வை  காசாக்கி கொண்டிருக்கிறது, என்று சாடுகிறார்கள். படம் வருவதற்கு முன்பு, இவர்கள், ராஜபட்சேவின் மயிரை  பிடுங்கி கொண்டிருந்தார் போலும். படத்தின் மூலம் நாம் என்ன தெரிந்துகொள்ள போகிறோம் என்பதுதான் தேவை. இன்னும் சிலர், படத்தின் கதை ஒரு சீன படத்தை  மையமாக கொண்டு, எழுதப்பட்டுள்ளது, என்று குற்றம் சாட்டுகின்றனர். நம்மில் ஒருவன் உயர்வது நம்க்கே பொறாமையாக இருந்தால், வேற்றுவன் எப்படி நம்மை  மதிப்பான்.

       வரலாற்றை கற்காதது முதல் குற்றம். ஆரியணை அரியனையில் அமர்த்தியது இரண்டாம் குற்றம். கற்பழிப்பு, கொள்ளை, கடத்தல் போன்ற தொழிலில் இருப்பவனை  அமைச்சனாகவும், காவல் அதிகாரியாகவும் ஆக்கியது மூன்றாம் குற்றம். இப்படி அடுக்கிகொண்டே போகலாம், நாம் செய்த குற்றங்களை. இவையெல்லாம் மாற வேண்டுமெனில், வரலாறு பயில வேண்டும், என்பதை தெளிவாக உணர்த்தும் படம் ஏழாம் அறிவு.

படத்தின் மூலம் அறியப்பட வேண்டியவை:
  •    அறிவியல் பிறப்பதற்கு முன்னரே தமிழன் "இயற்பியல், மருத்துவம், வான்வெளி, தற்காப்பு கலை" உள்ளிட்ட பல கலைகளை இப்போது இருப்பதை விட சிறப்பாக கூறி உள்ளனர் என கூறப்பட்டு உள்ளது.
  •    மரபனு(DNA) எனப்படும் மருத்துவ அறிவியலை ஓலை சுவடிகள் முன்னரே சாதாரணமாக கூறிவிட்டனர் என கூறுகிறது.
  •    உலகிற்கு வீரத்தையும் எப்படி வாழ வேண்டும் என கூறியவன் தமிழன் என ஆதாரத்துடன் கூறப்பட்டு உள்ளது.
  •    நம் வரலாறு நமக்கு தெரியாததால் மற்றவன் தொழில் நுட்பத்தை பார்த்து வியப்படைகிறோம்.
  • தமிழ் நூல்களை  கொண்டு ஆய்வுகள் நடத்த முடியாது என்று சொல்லும் விஞ்ஞானிக்கு பதிலாக அமையும் கதாநாயகியின் வசனம், பாராட்டுக்குரியது.
  • தமிழில் பேசுவதையே, இங்கு அவமானமாக நினைக்கும் வகையில், நிலைமையை  மாற்றி வைத்துள்ளனர். தமிழின் தெளிவான உச்சரிப்பே சுவாசம் தொடர்பான பல குறைபாடுகளை தவிர்க்க கூடியது. 
  • "எதாவது எதிர்த்து பேசினால் மதிப்பெண் குறைத்துவிடுவார்கள்." ஒவ்வொரு கல்லூரி மாணவருக்கும் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை.
  • வெளி நாட்டில் இந்தியன் என்று சொன்னால் மதிக்கவில்லை என்று இயக்குனர் கூரியிருந்தார். ஆனால், தமிழன் என்று சொன்னால், என்ன செய்வர் என்பதை  சொல்ல மறந்துவிட்டார் போலும். உலகெங்கும் தமிழர்களுக்கு, கற்றறிந்த மாமேதைகள் எத்தகைய மதிப்பு அளிக்கின்றனர், என்பதை சொல்லில் அடக்க முடியாது.
  • " நம்மள மலேசியாவில அடிச்சாங்க, இலங்கையில் அடிச்சாங்க இப்ப தமிழ் நாட்டுக்கே வந்து அடிக்கிறான். நம்மளால அவன்கிட்ட இருந்து ஓட மாத்திரம்தான் முடியுதில்லே ? , இப்ப ஒவ்வொரு நாட்டிலேம் அடி வாங்கிறம் பார்த்தியா ? திருப்ப அடிக்கணும் '' என்ற சூர்யாவின் பேச்சுக்கு " வீரம் வீரம் என்று சொல்லித்தானே பக்கத்து நாட்டில சண்டை போட்டாங்க. ஜெயிக்க முடிஞ்சுதா ? செத்துத்தானே போனோம்'' என்று ஸ்ருதி பதிலளிக்கின்றார். அதற்கு சூர்யா, "வீரத்துக்கும் துரோகத்துக்கும் வித்தியாசம் தெரிஞ்சுக்கோ. ஒரு தமிழனை ஒன்பது நாடு சேர்ந்து கொல்லுறதுக்கு பேரு வீரமில்ல... துரோகம்." இலங்கை போரை எடுத்து சொல்கிறது இந்த வரிகள்.
  •    தமிழையும் தமிழினத்தையும் எவராலும் அழிக்கவியலாது என்பது ஆணித்தனமாக பதியவைக்க இயக்குனர் அ.இரா.முருகதாசு செய்த உழைப்பு நன்றாக தெரிகிறது.
மனதில் கொள்ள வேண்டியவை:
     நாம் இராமாயணம், மகாபாரதம் போன்ற கேடு கெட்ட புரானங்கள் எனப்படும் மஞ்சள் புத்தகங்களை இளைய தலைமுறைக்கு போதிப்பதை  விட்டுவிட்டு, தமிழர்களின் வரலாற்றை கூற வேண்டும். புறநானூற்றை புகட்ட வேண்டும். வீரம் என்றால் என்ன என்பதை சொல்லிகொடுக்க வேண்டும். இவை அனைத்தும் செய்ய முதலில் தமிழை கற்க வேண்டும். தமிழ் ஒரு மொழி மட்டும் அல்ல, அது அறிவியல் என்பதை  உணர்ந்தால் போதும்.

    ஆனால் ஏன், பார்ப்பனீயா பெண்ணான சுருதி ஆசனை, கதாநாயகியாக தேர்வு செய்தார் இயக்குனர் என்றுதான் புரியவில்லை. 
     தந்தியடித்து தந்தியடித்து ஏமாற்றிய கருணாநிதியின், எண்ணங்களை எவ்விடத்தும் காண்முடியவில்லை. இதுதான் வருத்தம்.
(தொடரும்...)

எழுத்துருக்கள் Blender3D-யில்

     கற்றுகொண்ட பின்பு தொடரலாம் என்றிருந்தால், எதையும் செய்ய முடியாது. தவறு செய்து கற்றுகொள்வதே  சிறந்த முறை...


NURBS வளைவுகளை கொண்டு வடிவமைக்கபட்டது.

அணிவரிசை கொண்டு வடிவமைக்கபட்டது.